tamilnadu epaper

மனித நேயம் மலருமா

மனித நேயம் மலருமா


 மனித நேயம் மலருமா உலகில் சமூக நீதிகள் இங்கு வாழுமா

 மனிதனை மனிதனாக மதிக்கும் மக்கள் பண்பு வளருமாவாழுமா


 மனிதன் மனிதனாக வாழும் வரையும் துன்பமில்லை துயரமில்லை துணைக்கு எவரும் தேவையில்லை


 மண்ணாசை பொன்னாசை பொருளாசை இந்தப் பேராசைகள் மனிதநேயம் இறந்து ஒழிந்து விடுகிறது


 பேயாய் பிசாசாய் கருப்பாய் அலையாய் அலைகின்றான் பெண்ணோ எரியும் விளக்கு எண்ணெயை ஊற்றி விடுவாள்


 தேனை தடவி தெருவெல்லாம் புரண்டாலும் ஒட்டுற மண் தான் ஒட்டும் என்பது பழமொழிபொன் பொருள் பெண் ஆசைக்காக


 நரபலி கொடுக்கிறான் நாசமாக போகிறான் நொந்து வெந்து சாகிறான் தாய் பெற்ற போதும் புதைக்கும் நிர்வாணம் தான்


 உன் படிப்பு பட்டம் பதவி சொத்து

 உன் கௌரவம் கண்ணியம் எல்லாம் எங்கே எங்கே எல்லாம் மாறும் மறையும் தன்மை தான்


 நாசமா போன மூவகை ஆசை கொலை களவு ஆணவம் மம்மதை திமிரு எல்லாம் மாறும் எல்லாம் மறையும் தன்மை தான்


 ஐம்பது ஆண்டுக்கு முன்னால் மதமதகன் மண் சாலை கண்டேன் மனிதன் அடக்கம் செய்யப்பட்ட பானை அதில் கொஞ்சம் சாம்பலும்


 மண் விளக்கும் இருந்தது மற்றது எல்லாம் மண்ணோடு மண்ணாகி போனது அரசன் முதல் ஆண்டி வரை இங்கு


 அனைவருக்கும் ஒரே நீதி எந்த பாகுபாடும் யாருக்கும் இல்லை சமூக நீதி சம்மதர்மம் நீதி வழுவாத இயற்கையின் தீர்ப்பு


 இனியாவது மாற்றானை தன்னை போல் நேசிக்கும் மனித நேயம் மலர்ந்து இயற்கையோடு இணைந்து இன்பமாக வாழ்வோம் வாரீர்



பேராசிரியர் முனைவர் வேலாயுதம் பெரியசாமி

 சேலம்