tamilnadu epaper

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா


நாமக்கல் மாவட்டம் படைவீடு பேரூராட்சியில் *அப்துல்கலாம் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் தளிர்விடும் பாரதம் அறக்கட்டளையின்* சார்பாக மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.


நிகழ்விற்கு *அப்துல்கலாம் ஸ்போர்ட்ஸ் தலைவர் ஞானேஸ்வரன்* தலைமை வகித்தார்.


*செயலாளர் பார்த்தசாரதி* அனைவரையும் வரவேற்று பேசினார்.

 

*தளிர்விடும் பாரதம் தலைவர் சீனிவாசன்* சிறப்பு விருந்தினராக பங்கேற்று மரக்கன்றுகளை வழங்கினார்.


*தளிர்விடும் பாரதம் செயலாளர் பிரபு* பேசுகையில் *ஒவ்வொருவரும் மரக்கன்றுகளை நட்டு அதற்கு அவர்களின் பெயர்களை சூட்டி தினமும் தண்ணீர் ஊற்றி தமது வீட்டின் ஒருவரை போல கருதி மரக்கன்றுகளை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும்* என கூறினார்.


*தளிர்விடும் பாரதம் தனசேகரன்* பேசுகையில் *இளைஞர்கள், இயற்கை சார்ந்த திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும், அதற்காக பல புத்தகங்களை படித்து தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்* என கூறினார்


விழாவில் தளிர்விடும் பாரதம் *மகேந்திரன், சம்ரிதி, முத்து குமரவேலன், அப்துல்கலாம் ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள், படைவீடு பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள்* கலந்து கொண்டனர்.


விழாவிற்கான ஏற்பாடுகளை *அப்துல்கலாம் ஸ்போர்ட்ஸ் கிளப் கதிர்வேல், வெங்கடேஷ்* ஆகியோர் செய்து இருந்தனர்.


முடிவில் *அப்துல்கலாம் ஸ்போர்ட்ஸ் கிளப் பொருளாளர் கோகுல்* அனைவருக்கும் நன்றி கூறினார்.