tamilnadu epaper

மறைந்த உழவு

மறைந்த உழவு


  முன்னோர் பரம்பரை

         உழவை தொலைத்தோம்

 நவீன உழவை

 நாமும் செய்தோம்.


 கால்நடை போச்சு

 கோழியும் போச்சு

       பண்ணை கால்நடை

 வந்து வாழுது


 களப்பையும் கயிறும் 

உழுவதும் போச்சு

 உழவு தொழில்

 இழவு தொழிலாச்சி


 வயலும் வரப்பும்

        கிணறும் தானியமும்

 பயிறும் மறஞ்சி

  நஞ்சாக உணவு


 நஞ்சை மருந்து

  என்று விற்கிறான்

 பஞ்சபூதம் நஞ்சாச்சு

 உயிர்கள் அழிக்கிறது


 மனமே உணர்ந்திடு

 உடனே நீமாறிடு

  பழமைக்கு திரும்பு

 பாரினில் வாழவே



-பேராசிரியர் முனைவர்

வேலாயுதம் பெரியசாமி

 சேலம்