tamilnadu epaper

முதியோர் இல்லம்

முதியோர் இல்லம்


சமுதாயம் என்னும் கண்கவர் மாளிகையின்


காண சகிக்காத கழிப்பறைப்பகுதி!


கடமைத்தவறிய பிள்ளைகளை பெற்றவர்கள்


கதறிப்புலம்ப கூடுமிடம்!


அமைதியை 

நாடி வரும் அனைவருக்கும்


நிசப்தத்தை போதிக்கும் 

போதிமரம்!


பணத்தைக் 

கொடுத்து 


பாசத்தை 

பரிமாற்றம்

செய்யும்

விந்தைமிகு

சந்தை!


குடும்பத்தை 

தாங்கும் தூணாய் நின்றவர்கள்


துரும்பாய் தூக்கியெறியப்பட்டு ஒன்றுமிடம்!


சுவர்களை 

சுற்றிலும் இருக்கும் பாதுகாப்பு


அதில் வாழும் முதியோர் மனதில் 


முற்றிலும் இருப்பதில்லை!


தனிமையும் 

அச்சமும் 

மட்டுமே 


அடிமனதில் என்றென்றும் 

மிச்சம்!


-ரேணுகாசுந்தரம்