மேகங்கள்
மோதிக்கொண்டன!
மழை வருமென
மயில்கள்
ஆடத் தயாராகின...
வானிலை அறிக்கையும்
வரிந்து கட்டிக் கொண்டு
வரவா என்றது!
பாவம்
இவர்களுக்கெல்லாம்
தெரியாது தான்....
வந்திருப்பது
ரெட்டை ஜடை போட்ட
என்னவளின்
கார்கூந்தலென்று...?!!
-பிரபாகர்சுப்பையா,
மதுரை-625012.