முதியோரை மதியாது..
தெருவோரம் தள்ளி..
விதியென்று புலம்பும்
உலகமடா..!
கதியேது யென்றே..
கண்ணீரில் மிதந்து
கரைகாண நடக்கும்
கொடுமையடா..!
கருவாகச் சுமந்தாளே.. இங்கு
தெருவோரம் நடந்தாளே..
தோள் வைத்து சுமந்தவன் தள்ளாடி நடந்தான்.. இது என்ன கலிகாலமோ .?
இரு கால்கள் இருந்தாலும் தாங்க.. ஒரு மகனும் வரவில்லையே.. சுடும் வெயில் கொதிக்கும் மனமிங்கு தகிக்கும்.. தாய் தந்தை பாராது இருந்தாரே..!
உறவிங்கு பொய்யாச்சு..
காசே உலகென்று போயாச்சு! எனக்காக நீயும்.. உனக்காக நானும்.. உயிர்தாங்கும் நிலையாச்சு.!
முதியார்கள் காதல் இது
முடியாத கவிதை இது..
நதியோடு நடந்தால் கரையேரக் கூடும்.. விதியோடு நடந்தாச்சு! முதுமை தெருவோடு நடந்தாச்சு.!
-வே.கல்யாண்குமார்.