எந்த வண்ணமதை
எடுத்துச் செல்வேன்
நடைப்பயிற்சி முடிந்து
கீழிறங்கும் போது?
நிறம் மாறிக் கொண்டேருக்கும்
வானத்தின்
எவ்வொரு வண்ணமும்
கோபித்துக் கொள்ளக் கூடாதே?
மொத்தமாக
கருமையாகும் வரை
காத்திருக்கிறேன்.
கண் திருஷ்டி பொட்டென
விரல் நுனிக்குள்
அடைகாத்து கொள்கிறேன்.
நாளைய நாள் பொழுதினில்
வேறு வண்ணங்களாக
புலம் பெயர்த்திட.
-தாணப்பன் கதிர்
( ப. தாணப்பன் )