tamilnadu epaper

வளர்ப்பு

வளர்ப்பு


கடைக்குச் சென்ற ஜனனியின் வருகைக்காக காத்துக் கிடந்தனர் ராகினியும் அவரது தாய் மஞ்சுளாவும்.


நேரமாகிக் கொண்டிருந்தது ...

ராகினியின் அண்ணன் சுரேஷ் வாட்ஸ் அப்பில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.


இன்னும் எவ்வளவு நேரம் ஆகுமடா உன் பொண்டாட்டி வர பொரிந்து தள்ளினால் மஞ்சுளா மாமியார் கெத்தில் ...


ஜனனியின் காலடி கொலுசு சத்தம் கேட்கவே மெல்லமாய் சினுங்கத் தொடங்கினால் ராகினி..


வீட்டை பாரு போட்டது போட்டபடியே துணிகளும் பொருட்களும் அலங்கோலமாய் பாத்திரங்கள் துலக்காமலும் வீடு முழுக்க ஒட்டடை . வீடு போலவா இருக்கு. வீட்டை சுத்தமா தெய்வ கடாட்சமாக வைக்கக் கூடவா தெரியாது? அப்படி என்ன பெரிய வேலை?


பக்கத்து வீடும் தான் இருக்கே.. பார்க்கவே கோயில் மாதிரி எப்படி இருக்கு... ம் என்ன செய்ய பக்கத்து வீட்டு புள்ளைய அப்படி வளர்த்து அனுப்பி யிருக்கா அவங்க அம்மா! வளர்ப்பு அப்படி! என்ன சொல்லி என்ன பிரயோஜனம் என்றால் ராகினி.


உள்ளே நுழைந்த ஜனனி நல்லா சொன்ன ராகினி இன்னொரு முறை உள்ளே இருக்கிற உங்க அண்ணன் மண்டையில் நல்ல உரைக்கிற மாதிரி சொல்லு..


நானும் எத்தனை தடவைதான் சொல்றது பக்கத்து வீட்டு புஷ்பா புருஷன் வீட்டை எவ்வளவு நீட்டா வச்சிருக்கிறார். நீங்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கீங்கன்னு பல தடவை சொல்லி பார்த்துட்டேன் வளர்ப்பு அப்படி ? என்ன செய்ய முடியும் என்று கூறிய ஜனனியின் பேச்சைக் கேட்டு பேயறைந்தது போல இருவரும் வாயடைந்து நின்றனர்.



-கூத்தப்பாடி மா.

பழனி,

தருமபுரி