அன்புடையீர்,
வணக்கம். 1/5/25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பரில் முதல் பக்கத்தில் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் சொன்ன ஆசிரியர் குழுமத்திற்கு நானும் உழைப்பாளர் தின வாழ்த்துக்களை சொல்லி மகிழ்கிறேன். காஞ்சி சங்கர மடத்தின் 71 வது இளைய பிடாதிபதியாக பொறுப்பேற்றார் என்ற செய்தியும் படமும் கண் கொள்ளா காட்சி. இன்றைய பஞ்சாங்கம் மிக அற்புதமான நாளாக எனக்கு வியாழக்கிழமை தொடங்க வைத்தது.
ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா துவக்கம் என்ற செய்தி பார்த்து ரசிப்பதற்கு அருமையாக செய்தியாக பார்த்து ரசித்தேன். ஆதி ஜகன்னாதர் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாவித்த திருப்புல்லாணி ஆதி ஜகன்நாதர் படமும் செய்தியும் மிகவும் அற்புதம் பாராட்டுக்கள்
காஷ்மீர் எல்லையில் பதற்றம் பாகிஸ்தான் ஆறாவது நாளாக இந்திய ராணுவம் பதிலடி என்ற செய்தி வடக்கே என்ன நடக்கிறது என்று படம் பிடித்து காட்டியது. நலம் தரும் மருத்துவம் பகுதியில் உட்கார்ந்து வேலை செய்தால் அது எப்படி நமக்கு கல்லீரலில் கொழுப்பு நோயை கொடுக்கும் என்று மிக அருமையாக சொல்லி இன்று பலரும் ஐடி வேலை செய்பவர்கள் உட்கார்ந்து வேலை செய்கிறார்கள் அவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்கும் விழிப்புணர்வை கொடுத்த நல்ல தகவல்.
அரசியல். In என்ற பக்கத்தில் தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகர் நியமனம் என்ற செய்தி மற்ற செய்திகளும் அரசியல் நடப்பினை அழகாக படம் பிடித்து விவரித்து காட்டியது.
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் மறை. திருநாவுக்கரசு வரலாறு மிகவும் அருமை படிக்கும்போது அந்த கால நினைவுகளுக்கு என்னை கொண்டு செல்வது தான் உண்மை .
ஒவ்வொரு நாளும் புதுக்கவிதை பக்கங்கள் மெருகேறி கொண்டு இருக்கின்றன. கவிஞர்களின் ஒவ்வொரு கவிதை வரியையும் படிக்கும் போது கற்பனையில் மிதந்து மகிழ்கிறேன்.
பல்சுவை களஞ்சியம் பகுதி மிகவும் அருமை மீம்ஸ் சொல்லவே வேண்டாம் அவ்வளவு அற்புதமான கருத்தை சொல்லும் சிரிப்பை வரவழைக்கும் படங்கள். ஜோக்ஸ் ரசித்து படிக்க வைக்கிறது.
வாங்க சம்பாதிக்கலாம் என்ற பகுதியில் வரும் செய்திகளை படிக்கும் போது நாமும் சம்பாதிக்கலாம் என்ற ஒரு தன்னம்பிக்கை தரும் செய்திகளாக உள்ளது.
ஸ்ரீ நவநீதகிருஷ்ண ஸ்வாமிக்கு கருட சேவை என்ற படம் கண்ணுக்கு குளிர்ச்சியாக மனதுக்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் அள்ளிக் கொடுத்து விட்டது. உலகப் புத்தக தின விழா மிகவும் மகிழ்வான தகவல்.
நம்முடைய அரசியலில் கடமை கண்ணியம் கட்டுப்பாடோடு சுயக்கட்டுப்பாடு முக்கியம் என்று தொண்டர்களுக்கு நடிகர் விஜய் அட்வைஸ் செய்தது மிக மிக அருமையான நல்லதொரு தகவல் இதை கடைபிடித்தாலே போதும் அரசியல் நல்ல பாதையில் நடந்து செல்லும்.
திகில் கொடுக்கும் க்ரைம் கார்னர் படிக்கும் போது இப்படி எல்லாம் கூட இருக்குமா என்று எண்ணி விழிப்புணர்வுடன் இருக்க வைக்கிறது.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ் கணக்கை இந்தியா முடக்கியது சரியான செயல். தனியார் பள்ளி கட்டணத்தை ஒழுங்குபடுத்த சட்ட மசோதா என்ற டெல்லி அமைச்சரவை ஒப்புதல் செய்தது மிக நல்ல தகவல்.
அமெரிக்க மனைவி மகனை சுட்டுக் கொண்டு இன்றைய தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட செய்தி அதிர்ச்சியாக இருந்தது. தற்கொலை எந்த தீர்வுக்கும் முடிவில்லையே என்று அந்த பெரிய தொழிலதிபருக்கு தெரியாதா என்று ஆச்சரியமாக இருந்தது.
விக்னம் இல்லாமல் ஒரு செயலை தொடங்குவதற்கு நாம் விடியலில் கடவுளை வணங்க வேண்டும் என்பது போல தமிழ்நாடு இ பேப்பர் கொடுக்கும் செய்திகளை படித்தால் ஒரு உற்சாகம் வந்து அந்த நாள் முழுவதும் நான் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் விக்னம் இல்லாமல் வெற்றியை தருவதால் இந்த அழகான பணியாக செய்யும் தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .
நன்றி
உஷா முத்துராமன்