tamilnadu epaper

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-18.05.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-18.05.25


அன்புடையீர்,


வணக்கம் 18.5.25 அன்று தமிழ்நாடு இ பேப்பரின் முதல் பக்கத்தில் வந்த திமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை பலவித தகவல்களுக்கு பதிலளிப்பது போல இருந்தது .இன்றைய பஞ்சாங்கம் மிக அற்புத நாளாக என்னை உற்சாகமாக ஞாயிற்றுக்கிழமை தொடங்க வைத்தது தமிழ்நாடு இ பேப்பர் இதழுடன் கொடுக்கப்பட்ட பன்முகம் இதழ் படித்து மிகவும் மகிழ்ந்தேன். அருமையான செய்திகளை அழகாக தொகுத்துக் கொடுத்தது பாராட்டுக்குரியது.


திருக்குறள் மிகவும் அருமை படிக்க படிக்க மனத்தில் ஒரு நிம்மதி சூழ்ந்து கொள்வது உண்மை. சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அலங்காரம் என்று விநாயகர் பற்றிய தகவலை படித்து மனம் மகிழ்ந்தது.


கள்ளக்காதலுடன் அடிக்கடி உல்லாசம் திருமணத்துக்கு வற்புறுத்திய பெண் அடுத்து நடந்த கொடூரம் என்ற செய்திகளை படிக்கும் போது சமூகம் எங்கே சென்று கொண்டிருக்கின்றது என்ற ஒரு பெரிய கேள்விக்குறி மனதில் வந்தது நலம் தரும் மருத்துவம் பகுதி நல்லெண்ணெய் மனிதர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்ற செய்தி மிகவும் அருமை.


மின்சாரப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அமைச்சர் சிவசங்கர் அவர்கள் சொன்னது மிகவும் நல்ல தகவல் பாராட்டுக்கள் கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்து குழந்தை உட்பட ஐந்து பேர் இறந்த செய்தி மிகவும் வருத்தமாக இருந்தது.


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் வி எம் முனிசாமி வரலாறு மிகவும் அருமை. வரலாற்றுச் செய்திகளை இதுபோல தலைவர்களாக வரலாற்றுச் செய்திகளாக தொகுத்துக் கொடுப்பதில் தமிழ்நாடு இ பேப்பர் நிகர் தமிழ்நாடு பேப்பர் தான் மனமார்ந்த பாராட்டுக்கள்.


பல்சுவை களஞ்சியம் பக்கத்தில் வந்த வீணை என்ற. படித்தது வீணை ஒலி காதில் ஒலிப்பது போல மன மகிழ்ச்சியாக இருந்தது. மீம்ஸ் மிகவும் அருமை.


ஜோதிடம் அறிவோம் என்ற பகுதியில் வரும் தகவல்கள் அனைவரும் பயனுள்ள தகவல் ஜோதிடத்தின் மீது இருக்கும் நம்பிக்கை அதிகரிக்கச் செய்யும் நல்ல செய்திகளை தொகுத்து கொடுப்பது பாராட்டுக்குரியது.


நூறாவது பிறந்தநாள் கொண்டாடிய முன்னாள் எம்எல்ஏ சோ. மா. இராமச்சந்திரன் இல்லம் சென்று நம் தமிழக முதல்வர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தது மிகவும் அருமையான தகவல் பாராட்டுக்கள். 


மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேரளப் பயணம் ரத்து செய்த நிகழ்ச்சி வருத்தமாக இருந்தது. வெள்ளி வளையலுக்காக தாயின் இறுதி சடங்கை நிறுத்திய மகன் என்ற செய்தியை படிக்கும் போது தாய்மிடம் இப்படி ஒரு மகன் நடந்து கொள்வானா என்று வேதனையாக இருந்தது.


ஆப்ரேஷன் சிந்தூர் நிறைவடையவில்லை என்று பாகிஸ்தானுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை செய்தது போர் பற்றிய தகவலை மிக அருமையாக சொன்னது .


உபியில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த பல் மருத்துவரால் இருவர் உயிர் இழந்ததாக புகார் செய்த தகவல் அதிர்ச்சியாக இருந்தது மருத்துவத்தில் எத்தனையோ முன்னேற்றங்கள் வரும்போது எப்படி இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது என்று யோசிக்க வைத்தது.


விளையாட்டு செய்திகள் மிகவும் அருமை படிக்கும் போது விளையாட்டின் மீது இருக்கும் ஆர்வம் அதிகமாகிறது.


இந்தியாவுக்கு பணம் அனுப்பினால் 5% வரி என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தது அதிர்ச்சியான செய்தியாக உள்ளது. உலக செய்திகளை மிக அழகாக தெளிவாக கொடுத்து உற்சாக விடியலாக ஒவ்வொரு விடியலையும் உருவாக்கும் தமிழ்நாடு இ பேப்பர் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 


நன்றி 

உஷா முத்துராமன்