tamilnadu epaper

வாசகர் கடிதம் (எஸ்.அப்துல் ரஷீத்)-16.05.25

வாசகர் கடிதம் (எஸ்.அப்துல் ரஷீத்)-16.05.25

நான் சுமார் நான்கு மாதங்களாக தமிழ்நாடு இ பேப்பர் வாசித்து வருகிறேன். 665 நாட்களில் 28 லட்சம் வாசகர்களுடன் வெற்றிநடை போடுவது அறிந்து மகிழ்கிறேன். இது எப்படி சாத்தியமானது என்பதை அறிந்தால் ஆச்சரியமாக உள்ளது. ஒரு கோடி வாசகர்களின் உள்ளம் தொட....! என்ற வார்த்தை விரைவில் அடைந்து அதற்கு மேலும் தொடர வாழ்த்துக்கள். இன்றைய காலகட்டத்தில் நாளிதழ்கள் தொடர்ந்து வெளிவர சிரமப்படும் நேரத்தில், தமிழ்நாடு இ பேப்பர் சிறப்பான வடிவத்திலும், வண்ணப் படங்களுடனும் வெளிவந்து மெருகூட்டுகிறது‌. திருக்குறள், சிந்திக்க ஒரு நொடி, நலம் தரும் மருத்துவம், தினம் ஒரு தலைவர்கள், புதுக்கவிதை பகுதிகள், வாசகர் கடிதம், பல்சுவை களஞ்சியம், ஜோக்ஸ், விடுகதை, உள்நாட்டு, வெளிநாட்டு செய்திகள் மற்றும் விளையாட்டு செய்திகள் என்று கலக்கலாக ஒரு இ பேப்பர் வருவது ஆச்சரியத்திலும், ஆச்சரியம். இந்தியில் ஒரு பொன்மொழி சொல்வார்கள், 'மன் உஜ்லாதோ தன் உஜ்லா' என்று‌. மனது சுத்தமானது என்றால் செல்வமும் சுத்தமானது என்று. வாழ்க! வளர்க! இ பேப்பரை போற்றி வளரச்செய்து ஒரு கோடி வாசகர்களையும் தாண்டிச் செல்வோம்.


-எஸ்.அப்துல் ரஷீத்.

தஞ்சாவூர்.