tamilnadu epaper

வாசகர் கடிதம் (எஸ்.அப்துல் ரஷீத்)-18.05.25

வாசகர் கடிதம் (எஸ்.அப்துல் ரஷீத்)-18.05.25

. பாமக நிர்வாகிகள் கூட்டம். ராமதாஸ் திமுக கூட்டணியை விரும்புவதாகவும், அன்பு மணி ராமதாஸ் பாஜக கூட்டணியை விரும்புவதாகவும் தெரிகின்றது. கரூர் அருகே ஆம்னி பேருந்து-சுற்றுலா வேன் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு. கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்து: குழந்தை உட்பட 5 பேர் மூழ்கினர். செய்தி வருத்தம் அளிப்பதாக உள்ளது. தற்போது எங்கு பார்த்தாலும் விபத்துகள் நேரிட்ட வண்ணம் உள்ளது. சாலைகள் நன்றாக உள்ளன. வேக கட்டுப்பாடு தேவை.குடும்பத்தினருடன் செல்பவர்கள் ஓட்டுனர்களுக்கு தகுந்த ஓய்வு கொடுக்க வேண்டும். நீண்ட அதிகாலை நேர பயணத்தை தவிர்க்க வேண்டும். நல்லெண்ணெய்: மனிதர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். அருமையான தகவல். தற்காலத்தில் எண்ணெய் குளியல் குறைந்துவிட்டது. உணவு முறைகளால் மூட்டு தேய்மானம், மூட்டு வலி வருகிறது.


எஸ்.அப்துல் ரஷீத்.

தஞ்சாவூர்.