tamilnadu epaper

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-19.05.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-19.05.25


  கோபாலன் நாகநாதனின் 'ரெய்டு' என்ற சிறுகதை தன்வினை தன்னை சுடும் என்பது போல ஆகிவிட்டது. தர்மராஜனுக்கு வியாபாரத்தில் தொல்லை தரவேண்டும் என்று நினைத்த கோவிந்தராஜனுக்கு அக்னி பகவான் தனது வேலையை காட்டியது 'ஐயோ பாவம்' என்று இருந்தது!


  வி.பிரபாவதியின் ' அவர்களை அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்' சிறுகதை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. சகானாவின் கணவனை தெய்வம் என்றுதான் சொல்லவேண்டும். தனக்கு பிடிக்காத விஷயம் என்றாலும், அதை அவர் அமைதியாக சமாளித்த விதம் அற்புதம்.


  சசிகலா திருமாலின் 'சப்தமிடும் மௌனங்கள்...' தொடர்கதையில் தீபக் இலக்கியா காதல், இலக்கியா வீட்டில் தெரிந்து பிரச்சனையும் ஆரம்பமாகி விட்டது. தீபக்கை மறந்துவிடுகிறேன் என்று இலக்கியா சாமி முன்னால் தனது தாய்க்கு சத்தியம் செய்துக் கொடுத்தது கொஞ்சம் பாவமாகதான் இருந்தது. இனி தீபக் சத்தியாவின் காதல் என்னவாகும் என்பதை நினைக்கவே வருத்தமாக இருக்கிறது.


  மருதாணி என்றாலே ஒரு அழகுதான். ஆனாலும் மருதாணிக்கு இவ்வளவு மருத்துவ குணங்கள் இருப்பதை ஹீலர் அரவிந்தன் கட்டுரையை படித்துதான் தெரிந்துக்கொண்டேன்.


  முகில் தினகரனின் 'பல்லாங்குழி'யை பற்றிய கவிதை என்னை எனது சிறுவயது பருவத்திற்கே கொண்டு சென்றது. எங்கள் கிராமத்து வீட்டு பரண் மீது மரத்தால் ஆன பல்லாங்குழி இன்னும் கிடக்கிறது. நாங்கள் அந்த காலத்தில் பல்லாங்குழிக்கு காய்களாக புளியங்கொட்டையை பயன் படுத்துவோம்.


  'பச்சை ஆப்பிள் ஏன் சாப்பிட வேண்டும்?' என்ற கட்டுரையை படித்து அதன் பயனை அறிந்தேன். இங்கே அமெரிக்காவில் மற்ற பழங்களை விட ஆப்பிள் மிகவும் விலை மலிவு!


-சின்னஞ்சிறுகோபு,

  சிகாகோ.