tamilnadu epaper

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா)-01.05.25

வாசகர் கடிதம்  (நடேஷ் கன்னா)-01.05.25

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் 


ஜாதி வாரி கணக்கெடுப்பும் 


சேர்த்து நடத்தப்படும் என மத்திய


 அரசு அறிவிப்பு. காலம் தாழ்த்தாமல் 


நடத்தினால் நல்லது. காஞ்சி மடத்தில் 


இளைய மடாதிபதி பொறுப்பேற்பு. 


ஆந்திராவில் இருந்து வந்ததாக 


தகவல். காஷ்மீர் எல்லையை 


தொடர்ந்து ஆறாவது நாளாக 


பாகிஸ்தான் அத்துமீறல். 


ஒரு ஐஏஎஸ் அதிகாரி தனது பணி 


 காலத்தில் 57 முறை டிரான்ஸ்பர் ஆகி 


ஓய்வு பெற்றுள்ளார் நேர்மையான 


அதிகாரியாக இருக்க வேண்டும் 


என நினைக்கிறேன். தமிழகத்தில் 


இருந்து 10 கோடி மதிப்புள்ள 


கஞ்சா இலங்கைக்கு கடத்தல் 


நாடு விளங்கிடும். தொடுதல் பற்றிய 


விளக்க கட்டுரை அருமை. 


35 புதுக்கவிதைகளும் அனைத்தும் 


புதுவிதமாக இருந்தது 


 பாராட்டத்தக்கது. தேன் ராஜா 


அவர்களின் சமூகம் பற்றிய கவிதை 


நல்ல விழிப்புணர்வு கவிதையாகும். 



தமிழகத்தில் அட்சய திருதியை 


அன்று ஒரே நாளில் 25000 கிலோ


 தங்கம்


விற்பனை. மக்கள் அனைவரும் 


செல்வ செழிப்போடு இருக்கிறார்கள் 


என்று அர்த்தம். நம்ம கட்சியில் 


இருப்பவர்களுக்கு சுய கட்டுப்பாடு 


அவசியம் என விஜய் கூறியிருப்பது 


நல்ல செயல். மருத்துவக் கழிவுகளை 


கொட்டுவோர்


மீது குண்டர் சட்டம் பாயும் 


அதை அனுமதிக்கும் செக் போஸ்ட் 


அதிகாரிகளுக்கும் குண்டர் சட்டத்தில்


போட வேண்டும். டிரைவர்களுக்கு 


ஆங்கில பேச்சுத் திறமை இருக்க 


 வேண்டும் எனக்கு ட்ரம்ப்அறிவுரை. 


ஆங்கிலம் தெரியாவிட்டால் 


லாரி ஓடாதா. நாட்டின் பாதுகாப்பு 


 கருதி பெகாசஸ் பயன்படுத்தலாம் 


என உச்ச நீதிமன்றம் 


கூறியுள்ளது. திபெத் நாட்டிலுள்ள 


புனித தலங்களை பார்வை இட



சீனா அழைப்பு விடுத்து உள்ளது.



தினசரி பலதரப்பட்ட செய்திகளை 



 உடனுக்குடன் வழங்குவதோடு 


 அல்லாமல் புதிய படைப்பாளர்களை 


ஊக்குவிக்கும் தங்கள் பண்பும் 


பாராட்டதக்கது. வாழ்த்துக்கள் சார். 


-நடேஷ் கன்னா

கல்லிடைக்குறிச்சி