tamilnadu epaper

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா)-18.05.25

வாசகர் கடிதம்  (நடேஷ் கன்னா)-18.05.25


நான் அதிகாலை எழுந்திருப்பது 


தமிழ்நாடு இ பேப்பர் மெசேஜ் 


ஒலியை கேட்டுத்தான்.


இன்றைய பன்முகத்தின் கட்டுரைகள் 


அனைத்தும் சிறப்பானதாக இருந்தது 


அதிமுக முன்னாள் அமைச்சர் 


சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் 


லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை 


இத்தனை நாள் என்ன செய்து 


 கொண்டு இருந்தார்கள் 


இது போன்ற நடவடிக்கை தும்பை 


விட்டு வாலை பிடிப்பது போன்ற கதை 


பாமக நிர்வாகிகள் கூட்டத்தை 


அன்புமணி புறக்கணித்தார் 


இது ஒரு குடும்ப சண்டை 


என்று தீருமோ. நல்லெண்ணையின் 


பயன்கள் அற்புதம். அடுத்து 


எந்த எண்ணெய வெளியிட 


போறீங்க. இந்தியா பாகிஸ்தான் 


போரைப் பற்றி சர்ச்சை கருத்து 


கூறிய செல்லூர் ராஜு மன்னிப்பு 


 கோரினார் நடிகர் அஜித் எட்டு 


 மாதத்தில் 42 கிலோ எடையை 


குறைத்து இருப்பது பெரிய சாதனை 


அதனை மக்களுக்கும் சொன்னால் 


குண்டாக இருப்பவர்கள் 


 சந்தோஷப்படுவார்கள். 


வேலூர் முத்து ஆனந்த் அவர்களின் 


நான் சொல்வதெல்லாம் காதல் 


என்ற கவிதை இளைஞர்களை 


சுண்டி இழுக்கிறது. காதலுக்கு 


அத்தியாயம் படைத்துவிட்டார் 


வீணையில் இதனை வகைகள் 


உள்ளதா ஆச்சரியமாக உள்ளது 


கொல்கத்தா பக்தர் ஒருவர் 


திருப்பதி ஏழுமலையானுக்கு 


5 கிலோ எடை உள்ள தங்க 


பாதங்கள் வழங்கி உள்ளார். 


ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் 


முடியவில்லை என ராஜ்நாத் சிங் 



விளக்கம். ஒருபுறம் 


இங்கு நடக்கும் ராணுவ 


 நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு 


உளவு சொல்ல ஆட்கள் 


 இருக்கிறார்கள் அத்தகைய 


கருப்பு ஆடுகளை கண்டறிந்து 


தடுக்க வேண்டும். பாகிஸ்தான் 


இந்தியாவைச் சேர்ந்த பி எஸ் எப் 


வீரரை பிடித்து வைத்து 21 நாட்கள் 


தூங்கவிடாமல் சித்திரவதை 


செய்துள்ளது கண்டிக்கத்தக்கது 


மீண்டும் கொரோனா சிங்கப்பூர் 


ஹாங்காங் சைனாவில் வேகமாக 


பரவி வருகிறது. கொரோனா 


இந்தியாவிற்கு நுழையும் முன்பே 


தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 


அமெரிக்காவில் இருக்கும் 


இந்தியர்கள் தங்கள் 


 சொந்தங்களுக்கு பணம் 


 அனுப்பினால் ஐந்து சதவீத 


வரி விதிக்கப்படும் என டிரம்ப் 


அறிவிப்பு. டிரம்ப் பதவியேற்ற 


நாளிலிருந்து தினசரி ஒரு வரியை 


விதித்து கொண்டு தான் 


இருக்கிறார் பாவம் அமெரிக்கா 


பொருளாதாரத்தில் மிகவும் 


பின் தங்கிய நிலையில் இருக்கிறது 


போலும்.



-நடேஷ் கன்னா

கல்லிடைக்குறிச்சி