tamilnadu epaper

வாசகர் கடிதம் (நெல்லை குரலோன் )-01.05.25

வாசகர் கடிதம் (நெல்லை குரலோன் )-01.05.25


தமிழ் நாடு இ பேப்பரின் வருகை வாசகப் படைப்பாளருக்கு நல் திருப்புமுனை...

வாசிக்கும் வளர் உள்ளங்களுக்கு வளமான நல் விருந்து.

சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு ஒப்புதல்.

முதன்மை தலைப்புச் செய்தியாக முக்கியத்துவம் பெறுகிறது. இது 

இந்திய கூட்டணிக்குக் கிடைத்த வெற்றியா?

ராகுலுக்கு கிடைத்த வெற்றியா? பாஜக வுக்கு கிடைத்த பலத்த அடியா? பின்னடைவா?

அரசியல் ஆர்வலர்கள் ஆளுக்குத் தகுந்தபடி 

அரட்டை...

காஞ்சி சங்கர மடத்தின் 71--வது இளைய பீடாதிபதி பொறுப்பேற்றார்.

எப்பேர்ப்பட்ட புனிதமான பதவி...

எப்பேர்ப்பட்ட பாரம்பரிய பெருமை...

நெஞ்சம் கனிகிறது..

குளிர்கிறது...நெகிழ்கிறது.

சிந்திக்க ஒரு நொடி

ஒவ்வொரு நாளும் 

உயர்வைத் தரும் 

உன்னதமான கருத்து 

விருந்தை படைத்து வருகிறது.சபாஷ்!

தினசரி திருக்குறள் தரும் பாடம் தெவிட்டா தேனமுது! தொடரட்டும் இந்த முப்பால் மொழிதல்!


ஆன்மீகச் செய்திகள் அருள் வல்லமையை 

அயராமல் அளித்து வருகிறது.

காஷ்மீர் எல்லையில் பதற்றம்.

அன்பை விதைத்து, ஆராதித்து அகிலத்துக்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்த ஆகச் சிறந்த தேசத்தில் இந்த மாதிரியா? கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் கனிவு மிக்க காஷ்மீரத்தை!

57 முறை ட்ரான்ஸ்பர் ஆன ஐ.ஏ.எஸ். அதிகாரி. அசோக் கெம்கா பணி ஓய்வு.

அடேங்கப்பா... 57 தடவைகளா?

ட்ரான்ஸ்ப் அலவன்ஸ் 

அசோக் சாருக்கு எக்கச் சக்கமா கிடைச்சிருக்குமே!


பயணங்கள் முடிவதில்லை 

நேபாளம் கட்டுரை 

புகைப்படங்களுடன் நேர்த்தியாய் வந்திருந்தது. வாத்சல்யம்...

வாத்சல்யம்...!

தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் மறை திருநாவுக்கரசு வரலாறு...

வாசிப்புக்கு இதம்...

வாழ்க்கைக்கு வளம்!

புதுக்கவிதைகள் அனைத்துமே 

சிந்தனை சுரங்கம்.

மனதை சீராக்கும் மகத்தான அரங்கம்...

கவிஞர் பெருமக்களுக்கு 

காலமெல்லாம் 

நன்றியுடன் வாழ்த்துகள்!

தமிழ்நாடு இ பேப்பரின் ஆளுமை மிக்க ஆசிரியர் குழுவினர்க்கு அடியேனின் 

அன்பார்ந்த ராயல் சல்யூட்!



-நெல்லை குரலோன் 

பொட்டல் புதூர்