தமிழ் நாடு இ பேப்பரின் புதுமைப் பயணம் புத்துணர்வு பொக்கிஷம். தகவல் களஞ்சியம்.தெவிட்டா
தேனமுதம். தினந்தோறும் தொடர்ந்து வாசிக்கும் போது அன்பு ஆசிரியர் குழுவினரின் அளப்பரிய ஆற்றலும்
தீரா தேடல் தாகமும்
அள்ளக்குறையா அன்பின் பெருக்கமும்
தெளிவாய் தெரிகிறது.
திட சிந்தனையும் தெளிந்த நம்பிக்கையும் தூய அன்பும் இல்லாமல் இந்த பரவசம் அள்ளும் பயணத்தைத் தொடர முடியாது என்பதை சத்தியம் அடித்துச் சொல்லலாம், சான்றுகள் சாட்சிகளால் நிறைந்து இருப்பதால்...!
தமிழ் நாடு இ பேப்பரை தினசரி வாசிக்கும் வாசக சொந்தங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதை உணர முடிகிறது.இலட்சிய
இலக்கான ஒரு கோடி வாசக சொந்தங்களை விரைவில் இணைத்து ஜெயக்கொடி நாட்டும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
கலியுகத்தில் தோன்றிய கிருத யுகமே என்று உச்சி முகர்ந்து கொண்டாடும் ஆர்வம் கொப்பளிப்பதில்
அதிசயம் ஏதும் இல்லை.
ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்ததில் இதய ஆழத்தில் இருந்து வரும் நேர்மையான
விமர்சனப் பார்வை இது.இதன் மூல வேர்,
ஆன்ம நேயம் கலந்த பண்பாட்டுத் தளம் என்பதை உணர கொஞ்சம் பரந்து பட்ட
நெஞ்சமும் நேர்மைத் திறனும் வேண்டும்.
சராசரித் தன்மான எதிர்பார்ப்பு மோகங்களைக் கடந்த
மெய் ஞான மேக மழை என்று கூறினாலும் குறை ஒன்றும் கூற முடியாது. இதைப் பூரணம் உள்ளோர் புரிந்து பூரிப்பர் . இந்த பூரிப்பில் தான் பூமியின் பூரணம் உள்ளடங்கி உள்ளது என்பது தான் உண்மை.
அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை. ஊழல் விஷயத்தில் முன்னாள் என்ன இந்நாள் என்ன வேண்டிக்கிடக்கு...
ஒற்றுமை ரெக்கை கட்டி பறக்கிறதே!
இந்த சோதனைக்கு எடப்பாடியார் கண்டனம்...
எதிர்பார்த்தது தானே?
கண்டனம் கூறா விடில்
அவருக்கு உள்ளிருந்தே
அடுக்கடுக்காய்
சோதனைகள் வந்து சேருமே!
ஆபரேஷன் சிந்தூர் 7
பேர் தலைமையில் எம்.பி.க்கள் குழு வெளிநாடு பயணம்.
சூப்பர் திட்டம்.கூடவே
தொய்வில்லாமல் இயங்கினால் பயங்கர வாதத்திற்கு சாவுமணி அடித்திடலாம்.
போரில்லா உலகம் படைத்து பாரினில் எந்த நாட்டிலும் ராணுவ பட்ஜெட்டே இல்லாத நிலைமையை உருவாக்கி விடலாம்!
அது சரி... இந்த 7பேர் குழுவில் காங்கிரஸ் சிபாரிசு செய்யாத சசீதரூர் இடம் பெற்றது எப்படி? சூது அரசியலிலும் சுவாரஸ்ய சுவை உண்டு தானே?
மொத்தத்தில் சசீதரூர் இடம் பெற்றது காங்கிரஸுக்கு அவமானம்.
பாஜகவுக்கு வெகு மானம்.
தகுந்த இடத்தில் தகுந்த ஆட்களை
தட்டிக் கொடுத்து தூக்கி விடுவதும்
தரம் குறைந்து தாண்டி நடப்போரை
தள்ளி விட்டு
வேடிக்கை பார்த்து மகிழ்வதும் பாஜக வுக்குத் தான் கை வநத கலை ஆயிற்றே?
நலம் தரும் மருத்துவம்
நல்லெண்ணெய்: மனிதர்களுக்காக கிடைத்த வரப் பிரசாதம்.
நல்ல நல்ல தகவல்கள் கலந்த இக் கட்டுரையும் வாசகப் பெருமக்களுக்கு
நல்ல வரப்பிரசாதம் தானே?
சனி நீராடு என்று அன்றே ஆன்றோர்
இதற்காகத் தானே
சொல்லிச் சென்றனர்.
ராணுவ வீரர்கள் குறித்து செல்லூர் ராஜூ, அம்பு போல் பாய்ந்து வந்த எதிர்ப்பு களை உணர்ந்து பெட்டிப் பாம்பாய் அடங்கி மன்னிப்பு கேட்டார். என்ன இருந்தாலும் தெர்மாகொல் போல் வருமோ?
இது எட்ட முடியுமா?
'பா.நாராயணனின்பறவை பற பற 'ஜோர்...ஜோர்!
முகில் தினகரனின் என் மன வானிலே
படைப்பு அற்புதம். மீண்டும் படிக்க தூண்டியது...
வெல்டன்...வெல்டன்!
வி.எம்.முனுசாமி வரலாறு நல்ல விறுவிறுப்பு!
தமிழ் நாடு இ பேப்பரின் தனித்துவ பகுதியாக மிளிர்கிறது
நிஜம்.
கற்கண்டு கவிதைகள் அனைத்துமே அட்டகாசம்! கருத்தோட்டமும்
கற்பனை வளமும்
உச்சம் தொட்டு
உயர்வடைகின்றன.
மொத்தத்தில் தமிழ் நாடு இ பேப்பரின் மகிமை என்பது வேற
லெவல் என்றே சொல்ல வேண்டும்.
ஆசிரியர் குழுவினரின் சலிக்காத --சளைக்காத
உழைப்புக்கு
காலம் முழுவதும்
களைப்பு கொள்ளாமல் நன்றி கூறியவாறே
இருக்க வேண்டும்?
-நெல்லை குரலோன்
பொட்டல் புதூர்