தமிழ் நாடு இ பேப்பர் மாதம் இருமுறை மனம் கனிந்து வழங்கும் பன்முகம் மின்னிதழ் மகிழ்ச்சியை மட்டுமா
அள்ளித் தருகிறது?
அடடா... எத்தனை எத்தனை வகை வகைகள்... அத்தனையும் தித்திக்கும் தேன் பலாச்சுளை...
ஐம்பது பக்கங்களில்
உலகம் உணர்ந்த உன்னத பக்குவம் சித்தித்த திருப்தி.
வேள்வியாய் --
தவமாய் எண்ணி எண்ணி தயாரித்த
உயரிய மெனக்கடல்
உண்மையிலேயே
மெச்சத்தக்கது.
உள்ளம் தொட்டுச் சொல்கிறேன்...
உலகமே...தமிழ் கூறும் உலகமே ஒரு நாள்
உச்சி முகர்ந்து போற்றி கொண்டாடி மகிழும்.
தேடல் தாகம் தீயாய் தெறித்ததால் தான்
தாய்த் தமிழகம் போற்றும் இந்தத் தங்கத் தொகுப்பைத் தமிழர் விழிகளில் விருந்து படைத்திருக்கிறது தமிழ்நாடு இ பேப்பர்.
தரணி உள்ள வரை
இந்தப் பெரும் புகழ் நிலைத்து நிற்கும்.
யார் இந்த அஜித் தோவல்... உலகின் பார்வையை கவர்ந்துள்ள கம்பீரப் பெருமையில் எல்லோராலும் பேசப்படும் தலைவர்...
ஆளுமை மிக்க நிபுணத்துவம்... வியத்தகு
நெறியாளரைப் பற்றிய தகவல்கள்...
குறிப்புகள்... செய்திகள் அத்தனையும் அக்மார்க் தரம்...
அற்புத நேர்த்தியில்
பதிவாகி இருந்தது
பாராட்டத் தக்கது.
அஜித் தோவல் பற்றிய
கட்டுரை அறிவு ஜீவிகளுக்கு நெல்லை அல்வா ( அல்வா என்றதும் ஏடா கூடமா நினைச்சிடாதீங்க பாஸ்...) இளைஞர் கூட்டத்துக்கு அஜித் தோவல் கட்டுரை உற்சாக உந்துதல் தரும் ஊக்க டானிக்!
எத்தனை எத்தனை அனுபவங்கள்...
எத்தனை எத்தனை பாடங்கள்... எத்தனை எத்தனை சிலிர்ப்பு தருணங்கள்... சொக்க வைப்பதற்காக சொல்ல வில்லை...
உள்ளதை உள்ளபடி உணமை தளத்தில் நின்று உலகம் அறியும் வண்ணம் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதற்காக சொல்கிறேன்.
இன்றைய சூழலை சற்று நினைத்துப் பார்த்தால் பாஜக மேலிடம் ஆகச் சிறந்த முறையில் காய்களை நகர்த்தி சதுரங்க ஆட்டம் ஆடி சாதனை
படைத்து சரித்திரத்தை சொந்தமாக்கி விட்டது.
கோபத்தை எப்படி கூலாக்குவது?
அனைவரும் அவசியம்
படித்து பண்பட வேண்டிய கட்டுரை.
கோபம் என்பது மனிதனின் பொல்லாக் குணம்.
ஆறறிவின் துணையால் அதை ஆற்றுப் படுத்தி
அமைதிப் படுத்தி, அந்த இயல்பான மனித குணத்தை
வென்று வாகை சூட வேண்டும்.அது தான்
உண்மையான வெற்றி. இந்த தருணத்தில் ரெளத்ரம்
பழகு என்று தீர்க்க தரிசனத்துடன் பாடிய
பாட்டு வேந்தன் பாரதி தான் நினைவில் நிழலாடுகிறார்.
ரௌத்திரப் படு என்று சொல்ல வில்லை பாரதி. பழகு என்று தான் பக்குவமாக --
பாடமாகக் கூறுகிறார்..
கசப்பான எதார்த்த வாழ்வினை எதிர் கொள்ள, கோபப் படாமல் கோபப்படு என்பதைத் தான் நுட்பமாக ரௌத்திரம் பழகு என்கிறார்.
இந்த கோபப் பக்குவம் தகைந்து போனால்
தரணியே தன் வசமாகி விடும்.
பனைமரம் விசிறி என்ற இயற்கை ஏசி--
கட்டுரை எளிய நடையில் விளாசியது வெற்றி!
சோம்பல் நிறைந்த வாழ்வும் சமையலும் ஒதுக்கப் படும் சத்தான உணவு பொருளும் தலைப்பில் மிகவும் பயனுள்ள விசயங்கள் அலசப்பட்டுள்ளன.
அருமை...அருமை...
இன்னும் இன்னும் என்று எடுத்துச் சொல்ல எத்தனை எத்தனையோ சத்தான --சக்தி மிக்க விஷயங்கள் பொக்கிஷப் பெட்டகமாய் , படிக்கப் படிக்க குறையாத அளவில் விரிந்து -
நிறைந்து, செழித்து
பேரோளி வீசி பெருமைக்கு இலக்கணமாக திகழ்ந்து ஜொலிக்கின்றன...
இந்த எல்லாப் புகழும்
தமிழ் நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுவினர்க்கே....
வாழ்க வளமுடன்!
-நெல்லை குரலோன்
பொட்டல் புதூர்