இன்றைய கால கட்டத்தில் நாம் சில ,பல வாட்சாப் குரூபில் இணைந்து இருப்பது தவிர்க்க இயலாது.
அதில் நடைபெற்ற சில சுவராசியமான சம்பவம்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வாட்சாப் குரூப் சில குறிப்பிட்ட தகவல்களை பறிமாற ஏற்படுத்த படுகின்றன.சில 'அட்மின்் கள் சட்டாம் பிள்ளைகள் போல் மிகவும் கண்டிப்பாக செயல் படுவார்கள்.
அந்த குரூபில் காலையில் ஆன்மிகம் மாலையில் பொது தகவல்களை பதிவிடலாம். நான் காலையில் பொது தகவல்களை பதிவிட அந்த அட்மின் தூபாயிலிருந்து போன் செய்து அதை உடனே நீக்க சொன்னார்.
சற்று வயதானவர்கள் உள்ள ஒரு கரூப் அதில் ஒரு பணி ஒய்வு பெற்ற சற்று காது கேட்டல் குறையுடைய ஒரு அன்பர் அதிக பதிவு, பதில் போட்ட வண்ணம் இருந்ததால் எச்சரித்து நீக்கி விட்டனர் அவர் 'வாட்சப் கால்' செய்து மறுபடியும் அந்த குரூபில் சேர்த்து விடும்படி கெஞ்சி கேட்ட ஒரு சம்பவம்.
ஏதாவது துக்க நிகழ்வு நாட்களில் அதை பற்றிய புரிதல் இல்லாமல் " இனிய காலை வணக்கம் " என்று மெசேஜ் வரும்.
குழு தலைப்புக்கு சம்பந்தம் இலலாமல் உறுப்பினர்கள் செய்தி போடுவது , மற்றவர்கள் அதை சுட்டி காட்டினால் அதற்கு விவாதம் பண்ணுவது என்று சில பேர் உண்டு.
சிலர் தங்கள் பொருள்களை வியாபரம் செய்வதும் அதை சிலர் எதிர்பதும் உண்டு.
சிலர் தனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசர தேவை என்று கூறி பணம்,உதவி கேட்பதும் உண்டு.
இந்த செய்தியை பத்து குழுவுக்கு அனுப்பி கிப்ட் கூப்பன் வருமா என்று காத்து கொண்டு இருப்பார்கள் சிலர்.
சில குடும்ப குழுவில் யாரெல்லாம் உறுப்பினர்கள் என்று சரியாக தெரியாமல் சிலரை பற்றி அவதூறாக செய்தி போட்டு மாட்டி கொள்வதும் உண்டு.
சில குழுக்கள் "காலை வணக்கம்" சொல்வதை தடை செய்துள்ளன. மீறினால் தண்டனை உண்டு.
குழுவில் ஏற்கனவே வந்த செய்தியினை திரும்பவும் பதிவிட்டு திட்டு வாங்குவதும் உண்டு.
சிலர் நிறைய குழுவில் இணைந்து இருந்த போதிலும் எதையும் படிக்காமல் அப்படியே நீக்கி விடுதலயும் பார்த்துள்ளேன்.
ஆண்கள் குழுவில் பெண்கள்
பெண்கள் குழுவில் ஆண்கள் இணைவது நல்லதல்ல.
சில ஆலோசனைகள்
**************************
அதிக குழுவில் இணைய வேண்டாம்
குழுவின் சட்ட திட்டங்களை கடைபிடிக்கவும்.
குழுவில் மோதல் , தனிநபர் விமர்சனம் தேவையில்லை .
குழு பிடிக்கவில்லை , தேவையில்லை என்றால் விலக தயங்க வேண்டாம்.
குழு உறுப்பினர்கள் மனநிலையை மதிக்கவும் .
தனிப்பட்ட தகவல்களை குழுவில் பதிவிட வேண்டாம்.
சிலர் ஆதார் , பான் அட்டைகளை பதிவிடுவதை நான் கவனித்துள்ளேன் அதை தவிர்க்கவும் .
பெண் குழந்தைகள் படத்தினை குழுவில் பதிவிடுவதை தவிர்க்கவும்.
குழுவில் நியாயமான உதவி யாருக்காவது தேவைப்பட்டால
கண்டிப்பாக உதவவும்.
எதிர்மறை நோக்கத்துக்கு, சட்ட விரோதமான தகவல் பரிமாற்றத்திற்கு குழு ஏற்படுத்தாதீர் அல்லது
அதில் சேராதீர்.