tamilnadu epaper

நல்ல யோசனை

நல்ல யோசனை


    பிரபல நடிகர் தமிழ் வேந்தனின் ரசிகர்

கள் அவரது பிறந்த நாளை ஆண்டுதோறும் தடபுடலாகக் கொண்டாடுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் நடிகர் தமிழ்வேந்தனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு பல வண்ணங்களில் 

ஆளூயர போஸ்டர்கள், அம்பதடி நீளத்துக்கு வண்ணப் பேனர்கள் மற்றும் ரசிகர் மன்றக் கொடியை ஊரெங்கும் ஏற்றி வைத்தல் என சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டும் சிறப்பாக க் கொண்டாடுவதற்கு ரசிகர்களிடமும் பொது மக்களிடமும் நிதி திரட்டி வைத்திருந்தனர்.

தங்களது பிரியமான நடிகரின் பிறந்த நாளுக்கு இன்னும் பத்து தினங்களே இருந்த நிலையில் சென்னையில், ஒரு அரசியல் கட்சியினர் வைத்திருந்த பெரிய பேனர் காற்றில் விழுந்து, அதில் இரண்டு பேர் எதிர்பாராத நிலையில் இறந்து போனதால், நடிகர் தமிழ் வேந்தன், தன்னுடைய பிறந்த நாளை பேனர் வைத்துக் கொண்டாடவேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு பத்திரிகை வாயிலாக அறிக்கை கொடுத்திருந்ததைப் பார்த்து, ரசிகர் மன்ற நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

பொதுமக்களிடம் பிறந்த நாளைக்காக வசூல் செய்த பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் ரசிகர் மன்றத்தின் அவசரக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

பரபரப்பாக நடந்த கூட்டத்தில் ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைத் தெரிவித்தனர்.

கடைசியாக செயலாளர் சந்திரமோகன் சொன்ன யோசனையை அனைவரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.

அதன்படி நகரிலுள்ள அரசுப் பள்ளியில் தமிழ் வேந்தன் ரசிகர் மன்றத்தினர், பழுதடைந்த நிலையிலிருந்த கழிவறையை சுத்தம் செய்து, புதிய வர்ணமடித்து புதியகதவுகள், புதிய வாளிகள் மற்றும் தரைத்தளத்தை புதுப்பித்துக் கொடுத்தனர். இந்த சிறப்பான சேவைக்கு பொதுமக்களும் ஆசிரியர் பெருமக்களும், மாணவர்களும்

ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து பாராட்டி மகிழ்ந்தனர்.


-தமிழ்ச் செம்மல் 

நன்னிலம் இளங்கோவன்.