tamilnadu epaper

11ஆண்டுகளில் பிரதமர் மோடி 11 மிகப்பெரிய பொய்கள்: கார்கே

11ஆண்டுகளில் பிரதமர் மோடி  11 மிகப்பெரிய பொய்கள்: கார்கே


பெங்களூரு, மார்ச் 11–

கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி 11 மிகப்பெரிய பொய்களை சொல்லி இருப்பதாக காங்கிரஸ் தலைவர் கார்கே கிண்டல் அடித்துள்ளார்.

கர்நாடகத்தில் ஜெவார்கி என்ற இடத்தில் 1166 கிமீ சாலை அமைக்கும் திட்டம் துவக்க விழாவில் காங். தலைவர் கார்கே பங்கேற்றார்.இதில் பேசிய அவர், "பிரதமராக பதவி ஏற்ற மோடி பல பொய்களை கூறி நாட்டு மக்களை ஏமாற்றியிருக்கிறார். கடந்த 11 ஆண்டுகளில் அவர் 11 மிகப்பெரிய பொய்களை சொல்லி உள்ளார்" என பட்டியலிட்டார். அவை வருமாறு:

* வெளிநாட்டில் இந்தியர்கள் பதுக்கிய கருப்புப்பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியர் கணக்கிலும் ரூ.15 செலுத்தப்படும் என்றார். ஒருவருக்கு கூட தரவில்லை.

*ஒவ்வொரு ஆண்டும்2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவோம் என்று வாக்குறுதி தந்தார். இளைஞர்களுக்கு வேலை கிடைத்ததா? கண்டிப்பாக இல்லை. அப்படி இருந்தும் மோடியை இளைஞர்கள் ஆதரிப்பது ஏன்? சாதி,மத ரீதியில் ஆதரிக்கின்றனரா?

*பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதி தந்தார். குறைத்தாரா?

*2022ம் ஆண்டுக்குள் கங்கையை தூய்மை ஆக்குவேன் என்றார். கங்கை தூய்மை ஆகி விட்டதா?

*மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்றார். எத்தனை லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கினார்.

* 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டித் தருவேன் என்றார்கள். வீடுகிடைத்ததா?

* விவசாயிகள் வருவாய் இரு மடங்காக உயர்த்துவோம் என கூறியது 7வது பொய்.

  இப்படி பொய்கள் கூறக்கூடாது. பொய் சொன்னால் மக்கள் நம்ப மாட்டார்கள். கடைசியாக நடந்த மாநிலங்களவைத் தேர்தல் உள்பட ௧௨ தேர்தல்களை நான் சந்தித்தவன். இது வரை ஒரு பொய்யான வாக்குறுதியைக்கூட நான் கொடுத்ததில்லை. என்னால் முடிந்ததை செய்வேன். எனது செயல்பாடுகளை பொறுத்து நல்ல பலன்களை எதிர்பார்ப்பேன் என்று தான் எப்போதுமே நான் சொல்வது உண்டு. ஆனால் அவர் (மோடி) பொய்களைத் தான் சொல்வார். அவர் சொல்வதை கேட்காதீர்கள். அதைக் கேட்டால் பாதிப்பு உங்களுக்குத்தான்.

இவ்வாறு கார்கே பேசினார்.