tamilnadu epaper

18 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில் டெல்லி அணிக்காக 2-வது வீரராக மாபெரும் சாதனை படைத்த ஸ்டார்க்

18 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில் டெல்லி அணிக்காக 2-வது வீரராக மாபெரும் சாதனை படைத்த ஸ்டார்க்

விசாகப்பட்டினம்,


18-வது ஐ.பி.எல். தொடரில் விசாகப்படினத்தில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.


அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 163 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அனிகேத் வர்மா 74 ரன்கள் அடித்தார். டெல்லி தரப்பில் அபாரமாக பந்து வீசிய மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.


இதன் மூலம் 18 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில் டெல்லி அணி தரப்பில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஐ.பி.எல்.-ன் தொடக்க சீசனான 2008-ம் ஆண்டு அமித் மிஸ்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.


அத்துடன் நடப்பு ஐ.பி.எல். தொடரில் 5 விக்கெட் கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளராகவும் சாதனை படைத்துள்ளார்.


இதனையடுத்து 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி கேப்பிடல்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.