தஞ்சாவூர் மகர்நோம்புச்சாவடி, V.P.கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி ஶ்ரீ அலமேலு மங்கா ஸமேத ஸ்ரீ ப்ரஸன்ன வேங்கடேஸப் பெருமாளுக்கு நேற்று (06.05.2025) செவ்வாய்க்கிழமை *வஸந்த உற்சவம்*
காலை தாயார் சமேதராய் பெருமாள் வஸந்த மண்டபத்தில் எழுந்தருளல், அதனை தொடர்ந்து முற்பகல் சிறப்பு திருமஞ்சனமும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
இரவு தாயார் சமேதராய் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார், நாதஸ்வர இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் திரு.B.S. சேஷாத்திரி அவர்கள், வஸந்த உற்சவ சபை மற்றும் உபயதார்கள் செய்து இருந்தனர்.
செய்தி: *தேனே T.P.குமரன், மகர்நோம்புச்சாவடி, தஞ்சாவூர்*