tamilnadu epaper

நாகலாபுரம் பள்ளியில் ஆங்கிலப் பயிற்சி முகாம் !

நாகலாபுரம் பள்ளியில் ஆங்கிலப் பயிற்சி முகாம் !


நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப்பள்ளியில் 1-5-25 முதல் நடைபெற்று வந்த இலவச யோகா & ஆங்கிலப் பயிற்சி முகாம் இன்றுடன் (07.05.2025)நிறைவு பெற்றது. 40 மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உறவின் முறைத் தலைவர், உறவின்முறைச் செயலர்,பள்ளி நிர்வாகக்குழுத் தலைவர் மற்றும் செயலர் கலந்து கொண்டனர்.அனைத்து மாணவர்களுக்குமான ஊக்கப்பரிசுகளின் செலவினங்களை உறவின் முறைத்தலைவர் J. மாரி கண்ணபிரான் ஏற்றுக் கொண்டார். வகுப்பு எடுத்த ஆசிரியர்கள் J. ஜான் ஸ்டேனி , ச.ரமேஷ், வே.குணசேகரன், ப.கவிதா, வெ.நர்மதா ஆகியோருக்கு நிர்வாகம் சார்பில் பொன்னாடை வழங்கப்பட்டன.