நியூயார்க், மார்ச் 20
அமெரிக்காவின் எச் 1பி விசா திட்டத்தால் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சீர்திருத்தங்கள், இந்தியர்களுக்கு இருவேறு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய நிபுணர்களுக்கு எச் 1பி (H-1B) விசா திட்டத்தில் புதிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. இந்தத் திட்டத்தில் செய்யப்படும் எந்த மாற்றமும் இந்திய விண்ணப்பதாரர்களை ஆழமாக பாதிக்கும். அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) துறை, மார்ச் 20 ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தும் புதிய சீர்திருத்தங்கள் செயல்பாடுகளை நெறிப்படுத்தவும், மோசடியைக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பயனாளி-மையத் தேர்வுமுறை எனப்படும், ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே என்ற முறை அறிமுகம் செய்யப்படுகிறது. இதனால் நியாயமான வாய்ப்பு கிடைக்கும். புதிய விதியானது எத்தனை முதலாளிகள் விவரங்களை சமர்ப்பித்தாலும் ஒவ்வொரு விண்ணப்பதாரரும் ஒருமுறை மட்டுமே பரிசீலிக்கப்படுவதை உறுதி செய்கிறது. இந்திய தொழிலா ளர்களுக்காக, இது இருவேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது முன்னுரிமை வாய்ந்த நிறுவ னங்களின் ஆதிக்கத்தை குறைத்து சமத்துவ வாய்ப்புகளை வழங்கு கின்றது. பல்வேறு நிறுவனங்களின் மூலம் விண்ணப்பிக்க வாய்ப்பு ள்ளவர்களுக்கு இது குறைவான வாய்ப்புகளை ஏற்படுத்தலாம்