tamilnadu epaper

அருள்மிகு வீரமாகாளி அம்மன்,அருள்மிகு வீரமாமுனியன் ஆலயத்தின் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக விழா

அருள்மிகு வீரமாகாளி அம்மன்,அருள்மிகு வீரமாமுனியன் ஆலயத்தின் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக விழா

ஏப்.04

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூரில் அருள்மிகு வீரமாகாளி அம்மன்,அருள்மிகு வீரமாமுனியன் ஆலயத்தின் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெற்றது. சிவாச்சாரியார் சிவ ஸ்ரீ குமார் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் யாக வேள்வி நடத்தி புனித நீர் அடங்கிய கலசத்தை ஆலயத்தைச் சுற்றி எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்தனர் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்களம்பூர் கண்ணபட்டார் பங்காளிகள் செய்திருந்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.