tamilnadu epaper

அலங்காநல்லூரில் குறிஞ்சி வட்டார களஞ்சியம் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம்

அலங்காநல்லூரில் குறிஞ்சி வட்டார களஞ்சியம் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம்


அலங்காநல்லூர்.மே.26-


மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் குறிஞ்சி வட்டார களஞ்சியம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை ஒருங்கிணைப்பாளர் முருகேசன், மதுரை கிராமப்புற மண்டல சுகாதார ஒருங்கிணைப்பாளர் முத்தையா, ஆகியோர் செய்திருந்தனர், சிறப்பு விருந்தினராக மதுரை மண்டல கிராமப்புற ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன் கலந்து கொண்டார். இந்த முகாமில் சுமார் 255 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அதில் 55 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். 17க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை குறிஞ்சி வட்டார தலைவி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் வள்ளி நன்றி கூறினார்.