tamilnadu epaper

அவரைக்குளம் மாாியம்மன் கோவில் தீமிதி உற்சவம்

அவரைக்குளம் மாாியம்மன் கோவில் தீமிதி உற்சவம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் ஒன்றியம், பரசலூா் ஊராட்சி ,மாாியம்மன் கோவில் அவரைக்குளம் மாாியம்மன் கோவில் தீமிதி உற்சவம் கடந்த 23.5.2025ல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது 

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, காலைமுதலே மாவிளக்கு போடுதல் நோ்த்திக்கடன் செலுத்துதல் போன்ற நிகழ்வுகள் சிறப்பாக நடந்தன, மதியம் அம்பாள் முக்கிய வீதிகள்வழியாக செம்பனாா்கோவில்காவேரி ஆற்றுக்கு வந்து பின்னர் மாலை ஆறு மணிக்கு அவரைக்குளம் மாாியம்மன் கோவிலுக்கு வந்தடைந்தது பின்னர் தீமிதி உற்சவம் நடந்தது பெருந்திரளான பக்தர்கள் தீமித்தாா்கள் விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினா்கள்ஊர் முக்கியஸ்தர்கள் பக்த கோடிகள் சிறப்பாக செய்திருந்தனர் ௧ாவல் துறையும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தாா்கள் திமிதி உற்சவம் முடிந்து 24.5.2025ல் மஞ்சள் விளையாட்டு விழா நடந்தது அனைத்து வீதிகளுக்கும் அம்பாள் வீதிஉலா காட்சி சிறப்பாக நடந்தது

வழக்கம் போல திமிதி நிறைவு பெறும்போது மழை வந்தது பக்தர்கள் பரவசம் அடைந்தாா்கள்