திருவண்ணாமலை மாவட்டம் மே 24 கீழ்பென்னாத்தூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வைகாசி மாதம் மஹா பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு சிவ. ஆ. பாஸ்கரன் அவர்களால் அபிஷேக,ஆராதனையும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வழிபாடும் தீபாரதனையும் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்திகேச பெருமானை வழிபட்டனர். இரவு 7 மணி அளவில் உற்சவமூர்த்தி சாமி ஊர் வளமும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பிரசாதங்களும் வழங்கப்பட்டன.