tamilnadu epaper

இயற்கை உழவினை ஏற்றிடு தோழா

இயற்கை உழவினை  ஏற்றிடு தோழா

அறுவடை ஆனதும் அம்மண் உலர 

நறுமணம் வந்திடும் நாசி 

துளைக்கும்


கொழுகலப் பையினால்

குத்தி உழவே 

புழுக்கள் வயலில் புரளுமே நன்றாய்   


வளியின் அசைவும் வழியாய் அமையும்

துளியும் இறங்கி

துளையில் நுழைந்திடும்


வேப்பங் குழையது வெட்டியே வைத்திட 

ஆப்பென நோயை அழித்து விளைக்கும்


செயற்கை உழவினால்

சீர்கேடாம் சிந்தி

இயற்கை உழவினையே ஏல்



-சிவ.சே.முத்துவிநாயகம்