மூன்று முடிச்சி...
போடும் போதும்
முடிவில் மூச்சி நின்று
போகும் போதும்!
சொந்தம் என்று...
பந்தம் என்று
சொல்லிக் கொண்டு
தேடி வரும் இவர்கள்!
நாம் வீழும் போது...
எழுப்பி விடவும்
வேதனையில் நன்றாய்
ஆறுதல் தரவும்!
துயரத்தில்...
கண்ணீர் துடைக்கவும்
துன்பத்தில்
கை கொடுக்கவும்!
சோதனையில்..
தைரியம் சொல்லவும்
இடர்பாட்டில்
வந்து விடுவிக்கவும்!
கஷ்டத்தில்...
உடனே உதவிடவும்
கவலையில்
நம்பிக்கை தரவும்!
ஒரு நாளும்...
ஒரு போதும்
ஓடி வர மாட்டார்கள்
உண்மை அன்போடு!
-ஜெ.ம.புதுயுகம்
பண்ணந்தூர்