tamilnadu epaper

இளைஞர்களுக்கு குமரி கலெக்டர் அழைப்பு 'விவசாயம் செய்ய வாருங்கள்'

இளைஞர்களுக்கு  குமரி கலெக்டர் அழைப்பு  'விவசாயம் செய்ய வாருங்கள்'


நாகர்கோவில், மே.23–

இளைஞர்கள் விவசாயம் செய்ய முன் வரவேண்டும் என்று கலெக்டர் அழைப்பு விடுத்தார்.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அழகு மீனா தலைமையில் நேற்று நடந்தது. விவசாயிகளிடம் கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கொட்டாரம் அருகே அச்சங்குளத்தை சேர்ந்த பெனில் என்ற விவசாயி அதிக மகசூல் பெற்றதற்காக தமிழக அரசு சார்பில் பாராட்டப்பட்டார். அவர் விவசாயிகள் கூட்டத்தில் கவுரவப்படுத்தப்பட்டார். 

இதன் பின்னர் கலெக்டர் அழகுமீனா கூறியதாவது:  

 குமரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பெலின் தமிழக அரசு சார்பில் பாராட்டப்பட்டுள்ளார். அவர் எம்.ஏ.எம்.பில் பட்டதாரி ஆவார். பட்டம்படித்து விட்டு முழு நேரம் விவசாயமும் செய்து சாதனை படைத்துள்ளார். விவசாயத்தின் மூலமாக பல மடங்கு வருவாய் கிடைக்கும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் வருவாயை விட விவசாயத்தால் கிடைக்கும் வருவாய் அதிகமாக உள்ளது. குமரி மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்வமாக சாகுபடி செய்து வருகிறார்கள். இளைஞர்களும் விவசாயம் செய்ய முன்வர வேண்டும். வேளாண்துறையும், நீர்வளத்துறையும் இணைந்து விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.