ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.
செய்யாறு மே.1,
செய்யாறுஅடுத்த உக்கல் அருள்மிகு மடாவளம் காமாட்சி அம்பாள் கோயிலில் அமாவாசை அடுத்த மூன்றாம் நாள் கோயிலில் பிரசித்தி பெற்ற நிகழ்வான மூன்றாம் பிறை சந்திர தரிசன நிகழ்வு நேற்று நடைபெற்றது.
கோயிலில் யாகசாலை சிறப்பு பூஜையிணை ஆலயகுரு சங்கர் குருஜி நடத்தினார். பின்னர் கலச புறப்பாடு நிகழ்வும், அதனைத் தொடர்ந்து மூலவரான அம்பாள் நெற்றியில் மூன்றாம் பிறை தோன்றும் அரிய நிகழ்வும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து புனித நீரால் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மூலவரான அம்பாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆலய நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .மேலும் இதர வசதிகளும் செய்து தரப்பட்டதாக நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.