tamilnadu epaper

உலக புவி தினம்

உலக புவி தினம்


மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் 

எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் உலக புவி தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜவடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியர் சுகுமாறன் வரவேற்றார். புவி தினத்தின் முக்கியத்துவம், பூமி சூடாகும் விதம், அதனை குளிர்விக்கும் முறை, மரம் நடுவதன் அவசியம் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது. உலக புவி தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.