tamilnadu epaper

ஐ.பி.எல். வரலாற்றில் மேக்ஸ்வெல் மோசமான சாதனை

ஐ.பி.எல். வரலாற்றில்  மேக்ஸ்வெல் மோசமான சாதனை

ஆமதாபாத், மார்ச்.26-


பஞ்சாப் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் மேக்ஸ்வெல் ரன் ஏதுமின்றி, சாய் கிஷோரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். ஐ.பி.எல்.-ல் அவரது 19-வது டக்-அவுட் இதுவாகும். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை டக்-அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனை மேக்ஸ்வெல் வசம் ஆனது. தினேஷ் கார்த்திக், ரோகித் சர்மா தலா 18 டக்குடன் அடுத்த இடத்தில் உள்ளனர்.


குஜராத் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் நேற்று எடுத்த ஒரு விக்கெட்டையும் சேர்த்து ஐ.பி.எல்.-ல் அவரது விக்கெட் எண்ணிக்கை 150-ஆக (122 ஆட்டம்) உயர்ந்தது. இந்த மைல்கல்லை எட்டிய 12-வது பவுலர் ஆவார்.