"உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி ஒரு நிமிடம் மெளன அஞ்சலி" ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் பஹல்கம் பயங்கரவாத தாக்குதலால் உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏற்றி ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்த பட்டது. நிகழ்வில் நடிகர் மீசை மனோகரன், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, நடிகர் மீசை அழகப்பன், எழுத்தாளர் விவேக் ராஜ், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, நடிகை புனிதா மன்மதன், நடிகை முனீஸ்வரி, ஆர்த்தி லட்சுமி, பிரியதர்ஷினி, ரிஷிதா, நடிகர்கள், நடிகைகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.