tamilnadu epaper

கமுதியில் சீர் மரபினர் நலவாரிய அட்டை வழங்கப்பட்டது

கமுதியில் சீர் மரபினர் நலவாரிய அட்டை வழங்கப்பட்டது


கமுதி மே :-5 

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சீர் மரபினர் அடையாள அட்டை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.


கமுதி தாலுகாவில் உள்ள சீர் மரபினர் - மறவர் சமுதாய மக்களுக்கு தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறும் வகையில் சீர் மரபினர் அடையாள அட்டை பெற கடந்த நவம்பர் மாதம் சிறப்பு முகாம் கமுதி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது அதில் நலவாரிய அட்டை பெற விண்ணப்பம் கொடுத்த நபர்களுக்கு முதற்கட்டமாக 141 பயனாளிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை சார்பில் நலவாரிய அடையாள அட்டையை சீர் மரபினர் நலத்துறை அலுவலர் விடுதி காப்பாளர் பி.எம் பழனி பொதுமக்கள் அனைவருக்கும் சீர் மரபினர் அடையாள அட்டையை வழங்கினார் நிகழ்ச்சியில் பசும்பொன் தேவர் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் துணைச் செயலாளர் சர்க்கரை முனியசாமி,ஸ்ரீ பகவதி அறக்கட்டளை தலைவர் மு.வெள்ளைப்பாண்டியன், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் ஒன்றியத்தலைவர் பசும்பொன் இராமமூர்த்தி, இராமசுந்தரம்,அய்யனார், அலுவலக உதவியாளர் நாகநாதன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.