tamilnadu epaper

வேளாண்மை தொடர்பான பல்வேறு விளக்கங்கள்

வேளாண்மை தொடர்பான பல்வேறு விளக்கங்கள்

திருச்சிராப்பள்ளி மே 1 


மண்ணச்சநல்லூர் வட்டாரத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பான பல்வேறு விளக்கங்கள் அளித்தனர். 

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் பூனாம்பாளையத்தில் இன்று நடைபெற்ற மே தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துறையூர் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வேளாண் அனுபவப் பயிற்சி பெற்று வரும் இறுதி ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டு மணச்சநல்லூர் வட்டாரத்தில் நெல் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது என்றும் அதில் பூச்சிகளை கட்டுப்படுத்த அதிக அளவு ரசாயன உரங்களை பயன்படுத்துவதை தவிர்த்து உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும் எனவும், அளவோடு பயன்படுத்தி மண்ணின் வளத்தை காக்க வேண்டும் எனவும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் போது விவசாயிகள் தக்க பாதுகாப்பு நடவடிக்கையை தவறாது கடைப்பிடிக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் மாணவர்கள் வேளாண் திட்டங்களை விளக்கி கூறினர். இதுபோல் மற்ற துறைகளின் அலுவலர்களும் கிராம சபை பொருள் குறித்து விளக்கினர்.