tamilnadu epaper

கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்

கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்


 திரளான பக்தர்கள் பங்கேற்பு 


தென்காசி, மே - 03


தென்காசி அருகே உள்ள கீழப்புலியூர் தம்பிராட்டி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர்.


தென்காசி அருகே உள்ள கீழப்புலியூரில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள அருள்மிகு தம்பிராட்டி அம்மன் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா 8 நாள் திருவிழாவாக நடைபெறும். கடந்த மாதம் 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.


இந்நிலையில் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு சுவாமி வீதிஉலா, மாவிளக்கு ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது.


நேற்று அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய திருத்தேரோட்டம் காலை 6:30 மணிக்கு நிலையம் அடைந்தது. தேரோட்ட விழாவில் தென்காசி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.