திண்டுக்கல், மே 22–
திண்டுக்கல் மாவட்டத்தில் 98 பட்டிகளுக்கு தாய் கிராமமான மேட்டுப்பட்டியில் உள்ள அமைந்துள்ள காளியம்மன், பகவதியம்மன், லட்சுமி விநாயகர் கோவிலில் வைகாசி திருவிழா நடந்து வருகிறது. இதில் முக்கிய நிகழ்வாக பூக்குழி இறங்கும் நிகழ்வு நேற்று நடந்தது. காப்புக்கட்டிய பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறும் வகையில் கையில் குழந்தைகளோடும், ,காளியம்மன், பகவதி அம்மன் வேடமிட்டும் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.