திருவண்ணாமலை அக்டோபர் 21. திருவண்ணாமலை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் ச சுப்பிரமணியன் எழுதிய ..சிந்தனைப் பாதையிலே.. நூல் வெளியீட்டு விழா வள்ளல் மாதவ சின்ராசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு அருணகிரிநாதர் விழா குழு தலைவர் வி தனுசு.. திருமண மண்டபம் உரிமையாளர் சி எஸ் துரை. . தொழில் அதிபர் வி எஸ் குணசேகரன். . தமிழ்ச்செம்மல் பா. இந்திராசன்.. முன்னிலை வகித்தனர். . தமிழ்நாடு காந்தி பேரவை நிறுவனத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி எஸ் விஜயகுமார் அவர்கள் நூலை வெளியிட மூத்த வழக்கறிஞர் பா பழனி ராஜ் அவர்கள் பெற்றுக் கொண்டார். மற்றும் புத்தகம் பெற்றுக்கொண்டு பாவலர் வையவன். . கிரீன் டெக் எம் வினோத். . எழுத்தாளர் ந. சண்முகம்.. பணி நிறைவு கல்வி அலுவலர் மதியழகன். .. ஆசிரியர் தேவிகா ராணி உட்பட பலர் பேசினார்கள். . நூல் ஆசிரியர் ச. .சுப்பிரமணிய. ன் வரவேற்புரையும் நன்றி உரையும் கூறினார். இலக்கிய ஆர்வலர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.