சபரிமலை, மார்ச் 31
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி ஆராட்டு விழாவுக்காக இன்று (1 ந்தேதி) நடை திறப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர விழா, ஆராட்டு விழா, சித்திரை விஷு பண்டிகையையொட்டி கோயில் நடை தொடர்ந்து 18 நாள்கள் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படும் நிலையில் ஏப்ரல் 14ம் தேதி விஷு கனி தரிசனம், படி பூஜைகள் நடைபெற்று, 18ம் தேதி இரவு ஹரிவராசனம் முடிந்தவுடன் நடை அடைக்கப்படும். பின்னர், வைகாசி மாத பூஜைக்காக மே 14ம் தேதி திறக்கப்பட்டு, 19ம் தேதி நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் இணையதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.