சபரிமலை,ஏப்.3–
பங்குனி உத்திர திருவிழா மற்றும் சித்திரை விஷுவுக்காக சபரிமலை நடை நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. மேல்சாந்தி அருண் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஏப்., 14 - காலையில் சித்திரை விஷுவையொட்டி கனி காணும் நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்குதலும் நடக்கிறது. ஏப்., 18 வரை பூஜைகள் நடைபெற்று அன்று இரவு, 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.