tamilnadu epaper

சிறார்களுக்கான கோடைக்கால சிறப்பு யோகா இலவச பயிற்சி முகாம்

சிறார்களுக்கான கோடைக்கால சிறப்பு யோகா இலவச பயிற்சி முகாம்


உலக சமுதாய சேவா சங்கத்தின், குடியாத்தம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, K.V. குப்பம் சந்தைமேடு தவமையத்தில் சிறார்களுக்கான கோடைக்கால சிறப்பு யோகா பயிற்சி முகாம் 28-4-2025 அன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெற்ற இலவச வகுப்பின் நிறைவு விழா 7-5-2025 (புதன்) அன்று காலை 9:45 - 11:00 மணிக்கு நடைபெற்றது.


மனவளக்கலை துணைப் பேராசிரியர் S.மீனா அவர்கள் தவமியற்றி, பேராசிரியர் ஜெயலட்சுமி அவர்கள் வரவேற்புரை அளித்தார்.


அறக்கட்டளை தலைவர் பேராசிரியர் K.முருகவேல் அவர்கள் தலைமை தாங்க,

K.V.குப்பம், ஆண்கள் மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் C.தாண்டவமூர்த்தி அவர்கள் சிறப்புரையாற்றி சான்றிதழ்களை வழங்கினார். 


சுற்று வட்டாரத்திலுள்ள 100 க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட இப்பயிற்சி முகாமில், மூச்சுப் பயிற்சி, எளியமுறை உடற்பயிற்சி, எளிய ஆசனங்கள், நற்பண்புகளின் மேன்மைகள் ஆகியவை கற்றுக்கொடுக்கப்பட்டது.


செயலாளர் து/பேரா. N.ஜெயப்பிரகாச அரவிந்த் அவர்கள் வாழ்த்துரை வழங்கிட, பேராசிரியர் U.மரகதவல்லி அவர்களின் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது.


அறக்கட்டளை துணைத் தலைவர்-விரிவாக்கம், N.பிரபு அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

K.V.குப்பம் தவமைய பொறுப்பாசிரியர் துணைப் பேராசிரியர் M.கவிதா அவர்களுடன், துணைப் பேராசிரியர் அ/நி. S.புண்ணியகோட்டி அவர்களும் அ/நி. R.மார்கபந்து அவர்களும் அ/நி. U.மோதகப்ரியன் அவர்களும் ஒருங்கிணைந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்தனர்.