tamilnadu epaper

சீர்காழியில் ஸ்ரீ ஏழைக் காத்த அம்மன் , ஸ்ரீ மந்த கருப்பண்ண சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்

சீர்காழியில் ஸ்ரீ ஏழைக் காத்த அம்மன் , ஸ்ரீ மந்த கருப்பண்ண சுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்


சீர்காழி , மே , 02 -

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி, பசும்பொன் முத்துராமலிங்கனார் தெருவில் எழுந்தருளி அருள் பாலித்து வரும்

ஸ்ரீ ஏழைக்காத்த அம்மன், ஸ்ரீ மந்தகருப்பண்ண சுவாமி, ஸ்ரீ வினாயகர், ஸ்ரீ முருகன்,

ஸ்ரீ முன்னோடியான், ஸ்ரீ காளியம்மன்,ஸ்ரீ சப்தகன்னிகள் ஆலயங்களும் திட்டை ரோட்டில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயமும் திருப்பணிகள் செய்து புதுப்பிக்கப்பெற்று 

ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன

மகா கும்பாபிஷேகம் நடைப் பெற்றது . திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. சீர்காழி டாக்டர் கே.ஆர். சரவணன் நேரடி வர்ணனை செய்தார்.