திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் திருமதி தனலட்சுமி பாஸ்கரன் எழுதிய செம்மை மறந்தாரடி கிளியே சிறுகதை நூல் வெளியீட்டு விழா சிறகு பதிப்பகம் சார்பில் திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கத்தில் திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க சிறப்பு தலைவர் சௌமா ராஜரத்தினம் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க பொதுச்செயலாளர் ஜவகர் ஆறுமுகம் வரவேற்றார். பொருளாளர் முனைவர் சங்கரி சந்தானம், துணைத் தலைவர் சூர்யா சுப்பிரமணியம், செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் தமிழகன், பாட்டாளி, மதனா, முகமது ஷபி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் இந்திரஜித்
தாய் மொழி தின உரையாற்றினார்.
செம்மை மறந்தாரடி கிளியே சிறுகதை நூல் வெளியீட்டு விழாவில் திருச்சி மணிகண்ட வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி சிறப்புரை ஆற்றினார். எழுத்தாளர் தனலட்சுமி பாஸ்கரன் நூலினை வெளியிட மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை மேனாள் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நூலை பெற்றுக் கொண்டார். திருச்சிராப்பள்ளி தமிழ் சங்க அமைச்சர் உதயகுமார், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க துணை தலைவர் பத்மஸ்ரீ சுப்புராமன், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் கவிஞர் கோவிந்தசாமி, எழுத்தாளர் ஜனனி அந்தோணி ராஜ், முனைவர் பூமா ராமநாதன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். எழுத்தாளர் தனலட்சுமி பாஸ்கரன் ஏற்புரையாற்றினார். கவிஞர் ஆங்கரை பைரவி நிகழ்ச்சியினை நெறியாள்கை செய்திட, நிறைவாக திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க செயலர் நந்தவனம் சந்திரசேகரன் நன்றி கூறினார்.