*பெண்மணி-2:-* "கால் சென்டர்ல வேலை பார்க்கிறாங்களா..........?"
*பெண்மணி-1:-* இப்ப" />
*(1)* *பெண்மணி-1:-* "என்னோட பிள்ளைங்க எல்லாம் கொஞ்சங் கொஞ்சமா அமெரிக்க நேரத்துக்கு மாறிட்டு வர்றாங்க..........!" *பெண்மணி-2:-* "கால் சென்டர்ல வேலை பார்க்கிறாங்களா..........?" *பெண்மணி-1:-* இப்ப சம்மர் ஹாலிடேஸ் இல்லைய அதனால ராத்திரி பூரா ப்ளே ஸ்டேஷனில் கேம் விளையாடிட்டு, பகல் நேரம் பூரா குறட்டை விட்டு தூங்கறாங்க..........!!" *(2)* "மன்னரின் உடையில் முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு மந்திரி ஏன் போருக்கு போகிறார்....?" "எதிரி நாட்டு மன்னரை குழப்பத்தான். முகத்தில் மாஸ்க் உள்ளதால் மன்னர் தான் போருக்கு வந்திருக்கிறார் என்று எதரி நாட்டு மன்னர் நினைப்பாரே .....!!" *(3)* "தனது அறிக்கைகளில் மாற்றம் கொண்டு வரப்போவதாக நமது தலைவர் சொல்லி வருகிறாரே.....?" "அதுதான் அண்டை நாட்டு விவகாரங்களில் தலையிடும் அமெரிக்க அதிபர் பதவி விலக வேண்டும் என்று திடீர் அறிக்கை விட்டிருக்கிறாரா.........?!" *(4)* *சிறுமி(அம்மாவிடம்):-* “என்னம்மா இது.....? ஒரே வீடு ஒரே ப்ரேக்ஃபாஸ்ட்னு தினமும் இட்லியையே செய்து தர்றியே, உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியலையா......?” *(5)* "இது என்ன புதுசா ஒதுங்கு குழி.....?" "மன்னர் போரில் தோற்று புறமுதுகிட்டு ஓடிவரும்போது இளைப்பாற ஒதுங்குவதற்காக.....!!" *(6)* *மந்திரி:* மன்னா.... எதிரி படை எடுத்து வரவில்லை, பதுங்கு குழியிலிருந்து வெளியே வாருங்கள்..... *மன்னர்:* மந்திரியாரே நீர்தானே சொன்னீர் வெளியே பயங்கர சண்டை என்று.........? *மந்திரி:* அது அந்தப்புரத்தில் உங்கள் தாயாருக்கும், நமது அரசிக்கும் இடையே இரண்டு நாட்களாக அதி பயங்கர மாமியார் மருமகள் சண்டை மன்னா.......! *(7)* *புதுமண தம்பதிகளிடம் காவல் அதிகாரி:* உங்களுக்கு எங்க ஸ்டேஷனில் கல்யாணம் செஞ்சு வெச்சோம்கிற ஒரே காரணத்துக்காக தீபாவளி சீர் எல்லாம் நாங்களே செய்யணும்னு நீங்க எதிர்பார்க்கறது அநியாயம்…….! *(8)* “நம்ம நாட்டோட நிதி நிலமை ரொம்ப மோசமா இருக்குன்னு எப்படி சொல்றே……..?” “மன்னரை புகழந்து பாடுகிற புலவர்களுக்கு 5 வருட போஸ்ட் ஆஃபீஸ் சேவிங் பாண்டு சர்டிபிகேட் கொடுக்கறாங்களே.....!” *(9)* “கடந்த 35 வருசமா ஒரு லீவு கூட எடுக்காம நீங்க வேலைக்கு வந்து சாதனை செஞ்சிருக்கீங்களே, இதுக்கு யார் காரணம்.......?” “என் மனைவிதான் !............ வீட்டுல நிம்மதியா இருக்க விடாததாலதான் நான் ஆபீசே கதின்னு இருந்தேன்……….!!” *(10)* “அந்த பாங்கிலே அக்கவுண்ட் வெச்சிருக்கறத நான் பெருமையா நினைக்கிறேன். சமீபத்துல என்னோட அக்கவுண்டிலிருந்து ஆன்லைனில் பணத்தை திருட நடந்த முயற்சியை, பாங்க்காரங்க சமயோசிதமா முறியடிச்சிட்டாங்க” “எப்படி………?” “என்னோட அக்கவுண்டுல மினிமம் பேலன்ஸ் மெயிண்டன் செய்யலைன்னு இருந்த இருநூறு ரூபாயையும் பாங்க்காரங்க எடுத்துகிட்டதால சைபர் க்ரைம் ஆளுங்களோட கொள்ளை முயற்சி தோல்வியில முடிஞ்சிட்டது…..!!” -ஆர். ஹரிகோபி, புது டெல்லி Breaking News:
ஜோக்ஸ்