மதி, கதை கவிதை கட்டுரை எழுதிப்பார்த்து சோர்ந்தவன் மேடை ஏறி பேச்சுப்பயிற்சியும் செய்து பார்த்தான். அவன் கலை ஆர்வத்தை உணர்ந்து யாரும் நாலு வார்த்தை அவனைப் புகழ்ந்து பேசவில்லை என்ற பெரும் வருத்தத்தில் ஊர் ஊராக சுற்றிப்பார்த்தும் உரியப்பலன்இல்லாமல் சோர்ந்து விழுந்தான். அவனே பலருக்கு கருப்பொருளாக....
ஏதோ யோசனையில் அரசியலுக்குப்போலாமா?..என்ற சிந்தனையில் மூழ்க.. சற்றே நிமர்ந்தவன் தன்னைத்தானே கவிஞன் என்று அழைத்துக்கொண்டான்.
அங்கீகாரத்துக்காக அலையாய் அலைந்தபோது
அழைக்காத கூட்டம் தன்னுடைய சுய முயற்சியால் மேலெழுந்து கவிஞர் பட்டம் பெற்றுவிட்ட மதியை மன்ற பொறுப்பை எடுத்து நடத்த கட்டாய அழைப்பு விடுப்பதை எண்ணி வருந்திய நிலையில் இருந்தவனை தேற்றும் விதமாக நண்பன் இளங்கோ சொன்னான் இப்படி:
" மதி, நீ இந்த உலகத்தைப்பற்றி
இன்னும் சரியா புரிஞ்சிக்கில...
சராசரியாத்தான் புரிஞ்சுவச்சிருக்க!..
இந்த மன்றம்
இருக்கே பேருதான் 'நற்பணி!'
அதற்கு அற்பணிக்க நாம
துணிஞ்சுட்டோம்னா..
அதனால
பெரிய பேரு..புகழ் இவனுக்கு கிடைச்சுடுமோன்னு மன்றம்
நல்ல வளர்ந்து வர சூழலில்
நமக்கு கொடுத்த அந்தப்பொறுப்பை பிடிங்கிக்கொண்டு நம்மையும்
இந்த மன்றத்தையும் ஒரு லெவலிலே வைக்கப்பார்க்கும்.
நீ கவலைப்படாம அதை வாங்கி கொஞ்சம் விளம்பரப்படுத்து! ஏதோ ஒரு குறைகூறி..அந்தப்பொறுப்பை அதுவே பிடிங்கிக்கொள்ளும்!..
என்ன சரியா?" என்ற இளங்கோவை 'தலைவா!'என்று அதிர்ர்ந்ந்து கட்டிக்கொண்டான் மதி!
--- அய்யாறு.ச.புகழேந்தி