தாய்லாந்து தலைநகர் பேங்காக் நகரத்தில் ஈதுல் ஃபித்ர், ஈகைத் திருநாள் என்னும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
தாய்லாந்து தமிழ் முஸ்லிம் சங்கத்தின் கட்டடத்திலுள்ள பேங்காக் பள்ளிவாசலில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
அதை அடுத்து சகோதரர்கள் அனைவரும் அன்புடன் அரவணைத்து வாழ்த்துகளைப் பரிமா(ற்)றிக்கொண்டனர்.
பள்ளிவாசலின் தலைமை இமாம் ப்பீ.எம்.ஷபீர் அலி ஆலிம் மிஸ்பாஹி அவர்களுக்கு நீடூர் அ.முஹம்மது நிஜாமுத்தீன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்!
அப்துல் ரஹ்மான், ஜமால் மற்றும் பலர் உடனிருந்தனர்.