கோவை, மே 26–
திமுகவை வீட்டுக்கு அனுப்பும்கூட்டணியாக அதிமுக,பா.ஜ.கூட்டணி அமைந்துள்ளதாக மத்திய அமைச்சர் முருகன் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழ்நாட்டில் பினாமிகளின் ஆட்சி நடக்கிறது. தமிழ்நாட்டில் ஆட்சி நடத்துவது, முதல்வரா அல்லது தம்பிகளா? அரசு அதிகாரிகளுக்கு கட்டளையிடும் அளவிற்கு அந்த தம்பிக்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. இந்த தம்பிகள் தமிழகத்தை சுரண்டி கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தபடும் நிதிகளை எல்லாம் இவர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர்.
அரசியலுக்காக தான் முதல்வர் டெல்லி சென்றார் என்று மக்கள் எண்ணி கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்பு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தால் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும். ஆட்சி முடியும் தருவாயில் தான் டெல்லி சென்றுள்ளார். பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாடு வர வேண்டியது. தமிழ்நாடு வராமல் உ.பி. இந்த அரசாங்கம் தமிழகத்தை பின்னோக்கி கொண்டு செல்கிறது. திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கூட்டணியாக அதிமுக பாஜக கூட்டணி உள்ளது. யாரையும் அடிபணிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. யாரையும் மிரட்டவும் அவசியமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.